இறுதிப் போர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பில் இத் தருணத்தில் நான் எதையும் கூற விரும்பவில்லை.

அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டதன் பின்னர் அனைத்துக்கும் பதிலளிப்பேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை நேற்று முன்தினம் சந்தித்திருந்தார்.

இதன்போது இறுதி யுத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இதற்கு பதிலளித்திருந்த அவர், இறுதி யுத்தத்தை நான் வழிநடத்தவில்லை.

சரணடைந்தவர்கள் எவரும் கொல்லப்படவில்லை என இறுதி யுத்தம் தொடர்பில் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளிலிருந்து நழுவும் வகையில் கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார்.

இவ் விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here