தமிழ் தேசிய கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான என்.
சிறிகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கட்சி
அலுவலகத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தனித்து போட்டியிடுவது என்று தீர்மானித்துள்ளோம்.
அவ்வாறு தனித்துப் போட்டியிடும் போது கொள்கை அளவில் உள்ள தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து பயணிப்பதற்கு
நாம் அழைப்பு விடுக்கின்றோம் மேலும் தனித்து போட்டியிடுவதாக இருந்தால் அதற்கும் தயாராக இருக்கின்றோம்.
மக்கள் எம்மை தோற்கடித்தாலும் பரவாயில்லை நாம் கொள்கையில் உறுதியாக இருப்போம்.
தனித்து போட்டியிடுவதாக இருந்தால் நான் திருகோணமலை மாவட்டத்திலும் எனது கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்திலும் போட்டியிடுவது என உத்தேசித்துள்ளோம்.
அதற்கான முடிவினை எமது கட்சி விரைவில் கூடி ஆராயும். எனவே எம்முடன் பயனிக்க விரும்பும் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய தேசிய கட்சிகளுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.