இலகுவாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய நாடுகள் தொடர்பான உலக வங்கியின் சுட்டெண் தரப்பட்டியலில் இலங்கை முன்னேறியுள்ளது.

உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் நியுஸிலாந்து முதலாவது இடத்தில் உள்ளது. அத்துடன், குறித்த பட்டியலில் இலங்கை 99 ஆவது இடத்தில் உள்ளது.

2018ஆம் ஆண்டில் இலங்கை 100 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது.

வர்த்தகத்தை ஆரம்பித்தல், மின்சாரத்தை பெற்றுக்கொள்ளுதல், வர்த்தக பதிவு, கடனை பெற்றுக்கொள்ளுதல், வரி செலுத்துதல் உள்ளிட்ட 10 விடயங்களை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த மதிப்பீடு உலக வங்கியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here