நாட்டில் கடந்த 08 ஆம் திகதி முதல் தொடரும் மழையுடனான சீரற்ற காலநிலைக் காரணமாக நாடு முழுவதும் 9 மாவட்டங்களில் 1,295 குடும்பங்களைச் சேர்ந்த 4871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இதன் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்தும் உள்ளனர். மேலும் 25 வீடுகள் முழுமையாகவும், 615 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
கண்டி மாவட்டம்
கண்டி மாவட்டத்தின் பாத்ததும்பறை, தும்பனை, உடபலாத்தை, உடுதும்பறை, பஸ்பாகே கோரளை, கங்கா இகலை கோரளை, அக்குரணை, உடுநுவரை, கங்காவட்டை கோரளை, பாத்ததேவாகிட்டை, குண்டசாலை, டொலுவை, யட்டிநுவரை கரிஸ்பத்துவை மற்றும் தெல்தோட்டை பிரதேச செயலகங்கள் பலத்த மழை, கற்பாறை சரிவு, மின்னல் தாக்கம், மின்சாரதம் தடை, பலத்த காற்று போன்ற பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளன.
மேற்படி பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 91 குடும்பங்களைச் சேர்ந்த 387 பேர் இவ்வாறான அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்தும் உள்ளார். அத்துடன் ஒரு வீடு முழுமையாகவும் 78 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தும் உள்ளன.
நுவரெலியா மாவட்டம்
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவை, வலப்பனை மற்றும் நுவரெலியா பிரதேச செயலகங்கள் கற்பாறை சரிவு, மரம்முறிந்து வீழ்த்தல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து உள்ளன.
மேற்படி பிரதேச செயலகங்களில் 74 குடும்பங்களைச் சேர்ந்த 342 பேர் இவ்வாறான அனர்த்தங்களினால் பாதிக்கப்படுள்ளதுடன் 16 வீடுகள் முழுமையாகவும் 54 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தும் உள்ளன.
கேகாலை மாவட்டம்
கேகாலை மாவட்டத்தின் மாவனல்லை, கேகாலை, தெரனியாகலை, ரம்புக்கணை, வறக்கப்பொலை, யட்டியாந்தோட்டை, தெகியோவிட்டை, கலிகமுவை, அரநாயக்கா மற்றும் ருவான்வெல்லை போன்ற பிரதேச செயலகங்கள் மரம் முறிந்து வீழ்தல், கற்பாறை சரிவு, மின்சாரம் துண்டிப்பு, பலத்த மழை, மின்னல் தாக்கம் மற்றும் பலத்த காற்று போன்ற பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளன.
மேற்படி பிரதேச செயலகங்களில் 61 குடும்பங்களைச் சேர்ந்த 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் முழுமையாகவும் 60 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி மாவட்டத்தின் இம்புல்பே, பெல்மதுளை, கிரியெல்லை, பலாங்கொடை, அயகமை, எம்பிலிபிட்டிய, கொலொன்னை, கொடகவளை போன்ற பிரதேச செயலகங்கள் மின்சாரம் துண்டிப்பு, மண்சரிவு, கற்பாறை சரிவு, பலத்த காற்று மற்றும் மழை போன்ற பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளன.
மேற்படி பிரதேச செயலகங்களில் 71 குடும்பங்களைச் சேர்ந்த 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்தும் உள்ளார். அத்துடன் ஒரு வீடு முழுமையாகவும், 67 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டும் உள்ளது.
பதுளை மாவட்டம்
பதுளை மாவட்டத்தின் பதுளை, மீகாககிவுலை, வெலிமடை, பசறை, எல்ல, ஹலி-எலை மற்றும் அப்புத்தளை போன்ற பிரதேச செயலகங்கள் பலத்த மழை, மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளன.
மேற்படி பிரதேச செயலகங்களில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மூவர் உயிரிழந்தும், இருவர் காயமடைந்தும் உள்ளனர். அத்துடன் ஒரு வீடு முழுமையாகவும், 21 வீடுகள் பகுதியளவிலும் சேதடைந்தும் உள்ளன.
குருணாகல் மாவட்டம்
குருணாகல் மாவட்டத்தின் பொல்கஹவெலை, மஸ்பொத்தை, பண்டவஸ்நுவரை மேற்கு, மாகோ, பமுணுகொடுவை, கொபேய்கனை, கல்கமுவை, அலவை, வாரியப்பொலை, எகடுவெவை, நாரம்மலை, பன்னலை மற்றும் பண்டவஸ்நுவரை கிழக்கு போன்ற பிரதேச செயலகங்கள் பலத்த காற்று, மின்னல் தாக்கம் ஆகிய அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளன.
மேற்படி பிரதேச செயலகங்களில் 307 குடும்பங்களைச் சேர்ந்த 1,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நால்வர் காயமடைந்தும் உள்ளனர். அத்துடன் 4 வீடுகள் முழுமையாகவும் 292 வீடுகள் பகுதியளவிலும் சேதடைந்தும் உள்ளன.
புத்தளம் மாவட்டம்
புத்தளம் மாவட்டத்தின் முந்தல், வானத்தவில்லு, வென்னப்புவை, நாத்தாண்டி, சிலாபம், புத்தளம் மற்றும் மகாவெவை போன்ற பிரதேச செயலகங்கள் பலத்த மழை, பலத்த காற்று, வெள்ளம், மின்னல் தாக்கம் போன்ற அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளன.
மேற்படி பிரதேச செயலகங்களில் 623 குடும்பங்களைச் சேர்ந்த 2,183 பேர் பாதிக்கப்படும் உள்ளதுடன் இருவர் காயமடைந்தும் உள்ளனர். அத்துடன் 28 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்து உள்ளது.
அம்பாந்தோட்டை மாவட்டம்
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் கட்டுவானை பிரதேச செயலகம் பலத்த காற்று, மின்னல் தாக்கம் மற்றும் மிண்சாரம் துண்டிப்பு போன்ற பாதிப்புகளுக்கு முகொங்கொடுத்துள்ளது.
மேற்படி பிரதேச செயலகத்தில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்து உள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலகம் பலத்த மழை மற்றும் காற்று போன்ற அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளது.
மேற்படி பிரதேச செயலகத்தில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்து உள்ளது.
அம்பாறை மாவட்டம்
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலகம் மின்னல் தாக்கத்தினால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மேற்படி பிரதேச செயலகத்தில் ஒரு வீடு பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.