ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய ஒவ்வொரு வாக்களிப்பு மத்திய நிலையங்களிலும் இரண்டு பொலிஸார் வீதம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கு முழு அளவிலான அனைத்து பங்களிப்புகளையும் வழங்க தாயார் என தெரிவித்துள்ள அவர், பொலிஸ் பாதுகாப்புக்கு மேலதிகமாக நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் பூரண பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வாக்காளர்களை வாக்களித்த பின்னர் அங்கு குடியிருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.