இந்தியா – இலங்கை இடையிலான பாதுகாப்பு துறை ஒப்பந்தத்தின்படி, இருநாடுகளை சேர்ந்த கடற்படை வீரர்கள் ஆண்டுதோறும் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அவ்வகையில், ஆறாவது ஆண்டாக 7-9-2018 முதல் 13-9-2018 வரை நடபெறும் ஒருவார கூட்டுப் போர் பயிற்சிக்காக இந்திய கடற்படையை சேர்ந்த கிர்ச், சுமித்ரா மற்றும் கோரா டிவ் ஆகிய 3 போர் கப்பல்கள் திரிகோணமலை சென்றடைந்தன.