அமெரிக்காவில் நீயோர்க் மாகாணத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 6295 பேருக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் 28 பேர் இறந்துள்ளனர். இதனால் மேலும் கொரோன தொற்று பரவாமல் இருக்க
குறிப்பிட்ட மாகாணத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரசு அறிவித்துள்ளது.
புதியவகை வைரஸ் ஒமிக்ராண் பரவியுள்ளதா எனவும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதேபோல் ஐரோப்பாவில் கடும் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. லண்டன் மற்றும்
ஜெர்மனியிலும் 2 பேருக்கு ஒமிக்ராண் வரைஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரான்சில் 75 லட்சம் பேருக்கு கொரோன பரவியுள்ளது.
அதேபோல் ரஷ்யாவில் 80 லட்சம் பேருக்கும் கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது.