பாக்யராஜ் இந்த கதைக்கு சொந்தமான உதவி இயக்குநர் போஸ்கோ
பிரபுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 2017ஆம்
ஆண்டில் அவர் பதிவு செய்த வைத்த கதையிலும், ஹீரோ படக்கதையிலும் ஆரம்பம்
முதல் கடைசி வரை வரும் காட்சிகளில் ஒற்றுமை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சர்கார்’, ‘கோமாளி’ படங்களுக்கு இதே பிரச்னை வந்தபோது என்ன நியாயம் வழங்கப்பட்டதோ,
அதையே இதிலும் தீர்ப்பாக வழங்க முடிவெடுத்து இயக்குநர் மித்ரனுக்கு கடிதம்
அனுப்பியதாகவும், 20 நாட்களுக்கு மேலாகியும் பதில் அளிக்காமல் படத்தை
மித்ரன் வெளியிட்டு விட்டதாகவும் பாக்யராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தன் மூலம் சாட்சி கடிதமாக இது வழங்குவதாகவும், நீதிமன்றத்தில்
நீதி கிடைக்க வாழ்த்துவதாகவும் போஸ்கோ பிரபுவுக்கு பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.