பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
யாழ் மாவட்டத்தில் கடந்த சில நாட்களான தொடர்ந்து பொய்து வரும் மழை காரணமாக இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
விமான நிலையத்தின் நடவடிக்கைகள் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையிலேயே இவ்வாறு மழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளது.