மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர், பெளத்த மதத்திற்கு அவமானம் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஏனைய மதகுருக்களை அவமானப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடுகின்ற சுமண ரத்ன தேரர் தொடர்பாக காணொளிகள் பெரும் பரபரப்பையும், ஏற்படுத்தியுள்ள நிலையில்,
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தன்னுடைய முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கிறார்.
அதில் அவர் ,’ மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிடிய சுமண ரத்ன தேரர், பெளத்த மதத்திற்கு அவமானம்.
இவர் பகிரங்கமாக ஏனைய மத போதகர்களை, அரசு ஊழியர்களை தாக்கி, இனவாதமும், தூஷணமும் பேசி, பொலிஸாரை மதிக்காமல், சட்டத்தை கையில் எடுக்கிறார்.
இதுபற்றி வண. மகாநாயக்க பெளத்த தேரர்களின் கருத்தை நாட போகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.