பேரறிவாளன் உள்பட 7 பேர் தூக்கு தண்டனை பெற்றனர். பின்னர் இவர்களது தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

ராஜீவ்காந்தியை கொலை செய்ய தனு மனித வெடி குண்டாக மாறினார். அவர் பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி நான் வாங்கி கொடுத்தது என்று குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், இந்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. இருந்தாலும் எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

பேரறிவாளன் வழக்கு வருகிற நவம்பர் 5-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு பதிவுத்துறை பட்டியல் வெளியிட்டுள்ளது.

எனவே அந்த வழக்கை பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது. திட்டமிட்டப்படி நவம்பர் 5-ந்தேதி வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்படாது எனவும், நவம்பர் 5-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here