இரண்டு வயது குழந்தையான சுர்ஜித் உயிரிழந்த நிலையில் 80 மணி நேரத்துக்கும் மேலான போராட்டத்தின் பின்னர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்த நிலையில் 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்துவிட்டன.

குழந்தை இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து வைத்தியர்கள் சோதனை செய்ததில் உடல் அதிக அளவில் சிதைந்துவிட்டது தெரியவந்தது என தமிழக நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதனையடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சுர்ஜித்தின் உடலை மீட்டு வெளியே எடுத்தனர்.

பின்னர், அந்த உடல் அம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சுர்ஜித்தின் உடலுக்கு வைத்தியசாலையில் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

வைத்தியசாலை வளாகத்திற்கு அமைச்சர்கள், அதிகாரிகள் வருகை தந்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சுஜித்தின் உடல் உடனடியாக நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னர்,கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்கம் நடந்தபோது, சுஜித் தவறி விழுந்து உயிரிழந்த 600 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணறு, கொங்கிறீட் கலவையால் மூடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here