தர்பார் படத்தின் இடைவேளை பாட்ஷாவுக்கு நிகரா இருக்கும் என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தர்பார் படத்தின் இடைவேளை பாட்ஷாவுக்கு நிகரா இருக்கும் என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டது.
மேலும், படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பிரத்யேக பேட்டி கொடுத்திருந்தார்.
அப்போது தர்பார் படத்தை குறித்து பேசிய அவர், தனக்கு மிகவும் பிடித்த இன்டெர்வல் காட்சி பாட்ஷா தான் என்றும்
அதற்கும் சற்றும் குறைவில்லாமல் தர்பார் படத்தின் Intermission காட்சி இருக்கும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.