மீன் இனங்கள் ஆகியவை அழிந்து வருகின்றன. மாசடைந்த நதிகளையும், நீர்நிலைகளையும் சுத்தம் செய்ய அரசு முயற்சித்து வருகிறது.

நீர் நிலைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதில் ஜப்பான் நாடு முன்னிலை வகிக்கிறது. ஜப்பானில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் மிகவும் சுத்தமாக உள்ளன, அதுமட்டுமல்லாது சில நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாகவும் உள்ளது. ஆம் அதில் அழகான கோய் வகை மீன்கள் நீந்துகின்றன.

கழிவுநீர் மேலாண்மையை அந்நாட்டு அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கால்வாய்கள் தூய்மையாக உள்ளதையும் அவற்றில் வண்ண மீன்கள் நீந்துவதையும் வியப்பாக பார்த்து செல்கின்றனர்.

ஜப்பான் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் மதிக்கும் நாடு. அது எப்போதும் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அங்கு சாலைகள் சுத்தமாகவும் அழகிய சமநிலை கொண்டதாகவும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here