இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் ஸ்கொட்லாந்து செல்ல இருக்கின்ற நிலயில் இவருடைய பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து
புலம் பெயர் தமிழர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தை வரும் திங்கட்கிழமை ஏற்பாடு செய்துள்ளனர்.
கோத்தபாயவுக்கு எதிரான பரப்புரைகளை வித்தியாசமான முறையில் தமிழர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
டிஜிட்டல் யுகத்தில் அவர்களின் பணி மிகவும் சிறப்பாக இருக்கின்றது.
ஸ்கொட்லாந்தில் இயங்கும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்,
வானொலிகள் எல்லாமே கோத்தபாயவின் பயணத்துக்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும், வெளியிட்டிருக்கின்றது.
இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளியை ஸ்காட்லாந்து அரசு அனுமதிப்பதா என்று ஊடகங்கள் விமர்சித்துள்ளது.
பிரித்தானிய தமிழர்கள் இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது
பிரித்தானியாவில் இருக்கும் இலங்கை தூதகரத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.