சமீபத்தில் பிகைன்ட்வோட்ஸ் நடித்திய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட
தெலுங்கு நடிகை ராஷ்மிகா பிரபல தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை என்று தெரிவித்துள்ளார்.
கன்னடம், தெலுங்கு மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா.
தமிழ் திரையுலகில் இவர் கால்பதிக்கவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
2018-ம் ஆண்டு தெலுங்கில் ராஷ்மிகா நடிப்பில் கீதா கோவிந்தம் என்ற படம் வெளியானது.
இந்த படத்தில் வரும் இன்கேம்.. இன்கேம்.. பாடல் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பிகைன்ட்வோட்ஸ் நடத்திய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகை ராஷ்மிகாவிற்கு டாஸ்க் ஒன்று வழங்கப்பட்டது.
மூன்று நிற ரோஜாக்களை ராஷ்மிகாவிடம் கொடுத்துவிட்டு, இந்த மூன்றும், நட்பு, காதல், திருமணத்தை குறிக்கிறது. இதனை யாருக்கு வழங்குவீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ராஷ்மிகா நட்பை குறிக்கும் ரோஜா விஜய் தேவரகொண்டாவிற்கும்,
காதலை குறிக்கும் ரோஜா விஜய் சேதுபதிக்கும், திருமணத்தை குறிக்கு ரோஜா தளபதி விஜய்க்கும் என்று கூறினார்.