மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ள பதுளை, பசறை வீதி தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று மதியம் குறித்த வீதியின் ஒரு மருங்கு வாகன போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.
எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று மாலை 06 மணிக்கு குறித்த வீதி மீண்டும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதி அபிவிருத்தி செய்யப்படும் இந்த பாதையில் மண்மேடு மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளமையால் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது.
இந்த வீதியின் ஊடான 5 ஆம் கட்டையில் இருந்து கோனக்கல வரையில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது.
மாற்று வழியாக பதுளை, 2 ஆம் கட்டை வினித்தகம, வௌஸ்ஸ, 6 ஆம் கட்டை, வினித்தகம வரையிலான வீதியில் பாரிய வாகனங்கள் செல்வதற்கு முடியாதுள்ளது.
சிறிய வாகனங்கள் மாத்திரம் இதில் செல்ல முடிகின்றது. தற்பொழுது வாகன நெரிசல் இங்கு காணப்படுகின்றது.
இன்று காலை பரீட்சைக்காக சென்ற மாணவர்கள் மற்றும் தொழில் நிமித்தம் சென்றவர்கள் பொலிஸாரினால் மாற்று வீதியின் ஊடாக பயணம் செய்வதற்கு வசதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.