நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர்.
வடமேற்கு மாகாணம் சோகோட்டோவில் உள்ள
கோரோனிய நகருக்குள் புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 43 பொதுமக்கள் தளத்திலேயே பலியாகி உள்ளனர்.
கிராமத்திற்குள் மோட்டார்சைக்கிளில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள்
பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்
இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த தீவிரவாத அமைப்பு தொடர்ந்தும் மக்கள் மீது அதிகமான தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
அந்நாட்டு அரசு இதனை தடுப்பதற்கு தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.