விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா, ஆன்ட்ரியா, கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஜனவரி 1-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றிய நிலையில் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.