மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல்!

மட்டக்களப்பில் நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 14ஆவது நினைவேந்தல் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு

பல நோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் நேற்று பிற்பகல் இந்த நினைவு நிகழ்வு இடம்பெற்றது.

2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் ஆராதனையின்போது

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here