தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் சஞ்சனா. இவர் ஐதராபாத் மாதாபூரில் உள்ள ஒரு இரவு கேளிக்கை விடுதிக்கு சென்று இருந்தார்.

அந்த விடுதிக்கு தெலுங்கானா எம்.எல்.ஏ. நந்தீஸ்வர் கவுடு மகன் ஆஷிஷ் கவுடுவும் வந்திருந்தார். அங்கு பலரும் மது அருந்தி விட்டு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.

அப்போது சஞ்சனா கையைப்பிடித்து இழுத்து ஆஷிஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியான சஞ்சனா அவர் பிடியில் இருந்து தப்பி வெளியே ஓடினார்.

பின்னர் மாதாபூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆஷிஷ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனால் கைதாகலாம் என்று பயந்து ஆஷிஷ் தலைமறைவாகி விட்டார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு ஆஷிஷ் அளித்துள்ள போட்டியில், “எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன.

இதற்காக எனது விரோதிகள் சஞ்சனாவை பகடை காயாக பயன்படுத்தி என்மீது போலீசில் பொய்யான புகார் அளிக்க வைத்துள்ளனர். போலீஸ் நிலையத்தில் விரைவில் நேரில் ஆஜராகி உண்மையை தெரிவிப்பேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here