துறைமுகம் மீது தாக்குதல் அதிரும் உக்கிரேன் யுக்ரேனின் துறைமுக நகரமான ஒடெஸ்ஸாவின் (Odessa) மீது தாக்குதல் நடத்த ரஷ்ய படையினர்  தயாராகியுள்ளதாக  ஜனாதிபதி Volodymyr Zelenskyy தெரிவித்துள்ளார்.  

இந்த தாக்குதல் ரஷ்யாவின் முக்கிய இராணுவக் குற்றங்களில் ஒன்றாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஒடெஸ்ஸா (Odessa) துறைமுக நகரம் மீதான ரஷ்ய படையினரின் தாக்குதல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், யுக்ரேனின் நிலைமைகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் Naftali Bennett ஆகியோருடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளதாகவும் யுக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy தெரிவித்துள்ளார்.  

அத்துடன், யுக்ரேனுக்கான பாதுகாப்பு மற்றும் நிதியுதவிகள் தொடர்பில் அமெரிக்காவுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக யுக்ரேனில் இதுவரை பாரிய அளவிலானோர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த 10 நாட்களில் யுக்ரேனில் இருந்து 15 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here