ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் மூக்குத்தி அம்மன்.
இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், இந்துஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
எல்.கே.ஜி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
கன்னியாகுமரி மற்றும் சென்னையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்த படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
மே மாதம் திரைக்கு வர உள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டிருந்த படக்குழு,
தற்போது இரண்டாம் போஸ்டரை வெளியிட்டுள்ளது.