சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்சரவணன் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த படத்தில் இரண்டு பாடல்கள் பல கோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்டுள்ள நிலையில்
தற்போது இன்னும் இந்த படத்தின் நாயகி உறுதி செய்யப்படாமல் இருந்தது
இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஒரு நடிகை நடித்து வந்தாலும்
படத்தின் நாயகி கேரக்டரில் நடிக்கும் நடிகை இன்னும் நிரப்பப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி தமன்னா தான் என முடிவு செய்துவிட்டதாகவும் இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில்
கையெழுத்திடப்பட்டதாகவும், இந்த படத்திற்காக தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் இதுவரை பெறாத மிகப்பெரிய தொகையை தமன்னா பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது