காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உயிரைதர முடியாது

காணாமலாக்கப்பட்டவர்களின் உயிரை மீட்டுத் தரமுடியாது.

அவர்களது குடும்பத்தாருக்கு உதவிகள் வழங்குவோம் என்று இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்து என சொல்லுங்கள், எமது காணிகளை மீள வழங்குங்கள்,

எமது வாழ்க்கைக்கான தொழிலை நடத்த கடற்படையின் தடைகள் நீக்குங்கள் என்பன தமிழ்மக்களின் கோரிக்கைகளாகும்.

அவற்றுக்கு நாம் முடிந்தளவு தீர்வுகளை வழங்கியுள்ளோம்.

இறுதியாக காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினையில் அவர்களின் உயிரை மீட்டுத் தரமுடியாது.

அவர்களுக்காக அவர்களது குடும்பத்தாருக்கு உதவிகள் வழங்குகின்றோம் என்று கூறினோம். என மேலும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here