தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பணியகத்தின் தலைவர் பதவியிலிருந்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இராஜினாமா செய்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது, சந்திரிகாவின் எண்ணக்கருவுக்கமைய, 2015ஆம் ஆண்டில் இந்தப் பணியகம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப் பணியகத்தினூடாக, வடக்கு, கிழக்கு, வடமத்தி மற்றும் மொனராகலை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவி விலகல் கடிதமானது, ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இன்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here