கொரோனா வைரசுக்கு சீனாவை விட இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இத்தாலியில் இதுவரை இல்லாத வகையில் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 627 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 4032 ஆக உயர்ந்துள்ளது.
47 ஆயிரத்து 21 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 5986 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.