கனடாவில் மூன்று வாரங்களுக்கு மேலாக நீடித்துவரும் போராட்டத்தால் அரசு கடும் சிக்கலில் உள்ளது.
ஒட்டாவா நகரத்தில் இந்த போராட்டம் நடைபெற்று வருகின்றது தடுப்பூசி செலுத்துவதற்கு எதிராக சாரதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை விரட்டும் நோக்கில் காவல்துறையினர் முயன்று வருகின்றனர் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் தண்ணீரில் உடலுக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய ரசாயன கலவைகளை கலந்து போராட்டகார்கள் மீது தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை 100 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று சனிக்கிழமை 47 பேருக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
பாராளுமன்றம் மற்றும் பிரதமர் காரியாலயத்தை முற்றுகையிட முயன்ற பொது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.