தர்பார் படக்குழுவை எச்சரித்த சசிகலா தரப்பு.

ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான படம் தர்பார்.

இந்தப் படத்தில் காசு இருந்தால் சிறைக்கைதி கூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

சர்ச்சைக்குரிய வசனத்தை தர்பார் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும், காவல்துறை அதிகாரி வினய் குமார் அறிக்கையிக் சசிகலா ஷாப்பிங் போனதாக எங்கேயும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்திருக்கும் அவர்,

அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், அவ்வாறு நீக்கப்படாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என்றும் தெரிவித்துள்ளோர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here