எதிர்க்­கட்­சித்­த­லைவர் பத­விக்கு யாரை முன்­மொ­ழி­வது என்­பது தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினுள் தொடர்ந்தும் இழு­ப­றி­யான நிலைமை நீடிக்­கின்­றது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித் பிரே­ம­தாஸ அணி­யி­ன­ரி­டையே கடு­மை­யான போட்டி நிலவி வருகின்றது.

முன்­ன­தாக கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பெயரை எதிர்க்­கட்­சித்­த­லைவர் பத­விக்கு முன்­மொ­ழிந்து கடிதம் அனுப்­பி­யுள்ள நிலையில் 45 உறுப்­பி­னர்கள் கையொப்­பத்­துடன் சஜித் பிரே­ம­தா­ஸவின் பெயரை அப்­ப­த­விக்கு முன்­மொ­ழிந்து கடி­த­மொன்றை அனுப்­பி­யி­ருந்­தனர்.

பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களின் பிர­காரம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அர­சியல் கட்­சி­யொன்றில் அதன் செய­லா­ளரால் முன்­மொ­ழி­யப்­ப­டு­ப­வரே எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ராக நிய­மிக்­கப்­ப­டுவார். அவ்­வா­றான நிலையில் கட்­சியின் தலைவர் என்ற வகை­யிலும், செய­லா­ளரால் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளவர் என்ற வகை­யிலும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கே எதிர்க்­கட்­சித்­த­லைவர் பதவி வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

எனினும் முன்­னைய சந்­தர்ப்­பத்தில் அநுர பண்­ட­ர­நா­யக்க அவர் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய கட்­சியின் சார்பில் அதி­க­ளவு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பரிந்­து­ரைத்­த­மையின் கார­ணத்­தி­னா­லேயே எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். ஆகவே பாரா­ளு­மன்ற வர­லாற்றில் அதி­க­ளவு உறுப்­பி­னர்­களின் விருப்­பிற்கு அமை­வாக எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­கப்­பட்­டுள்ள முன்­னு­தா­ர­ணத்­தி­னையும், ஹன்சாட் சான்­று­க­ளையும் முன்­னி­லைப்­ப­டுத்தி சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு எதிர்க்­கட்­சித்­த­லைவர் பத­வியை வழங்க வேண்டும் என்று அழுத்­த­ம­ளிப்­ப­தற்கு அவ­ரது அணி­யினர் திட்­ட­மிட்டு வரு­கின்­றனர்.

ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் இவ்­வாறு ஏட்­டிக்­குப்­போட்­டி­யான நிலை­மைகள் ஏற்­பட்­டுள்ள நிலையில் ,நாளை திங்­கட்­கி­ழமை ரணில், சஜித் அணி­யினர் தனித்­த­னி­யாக அடுத்த கட்ட நகர்­வுகள் குறித்து கூடி ஆரா­ய­வுள்­ள­தாக இரு­த­ரப்பு தக­வல்கள் தெரி­வித்­துள்­ளன.

சஜித் அணி­யினர் கட்­டுக்குள் அடங்­காது கட்­சியைப் பிள­வு­ப­டுத்தும் எல்­லைக்குச் செல்­வார்­க­ளாயின், உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் வகையில் சபா­நா­யகர் பத­வி­யி­லி­ருக்கும் கரு ஜய­சூ­ரி­யவை அப்­ப­த­வி­யி­லி­ருந்து விலகச் செய்து ஐ.தே.க.வின் தலை­மைப்­ப­த­வியை வழங்­கு­வது பற்­றியும் ஆராய்ந்­தி­ருக்­கின்றார்.

2004 லில் ரணில் விடுலை புலிகளை பிரித்தது நினைவுக்கு வருகின்றது.

விதைத்தவன் வினை அறுப்பான் என்று முன்னோர் சொன்னது நல்லாவே இப்ப நடக்குது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here