மகாராஷ்டிரத்தில் அடுத்தடுத்து திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் நேற்று வரை காங்கிரஸ்- என்சிபி- சிவசேனா கூட்டணி அமைத்து அதில் உத்தவ் தாக்கரே முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்டது.
சுழற்சி முறையில் முதல்வர் பதவி கேட்டு சமாதானம் அடைந்த பவார், உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய ஆட்சி மலரும் என நேற்றைய தினம் பேட்டி அளித்தார்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக பாஜக- என்சிபி கூட்டணி உருவானது.
இதையடுத்து முதல்வராக தேவேந்திர பட்னவீஸும் துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர்.
இவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சரத்பவார் கூறியது.
பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்திருக்கும் அஜித் பவாரின் முடிவுக்கு ஆதரவு இல்லை.
துணை முதல்வராக பதவியேற்றது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என்றார் சரத்பவார்.
மகாராஷ்டிரத்தில் புதியதாக ஆட்சி பொறுப்பேற்ற சிறிது நேரத்தில் சரத்பவார் இவ்வாறு அறிவித்துள்ளார்.