லெபனான் நாட்டில் ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

லெபனானில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பொறுப்பேற்று கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி பதவி விலகினார்.

இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுனுக்கு ஆதரவாக பெய்ரூத் நகரில் நூற்றுக்கணக்கானோர் ஊர்வலம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊழல் அற்ற சுதந்திரமாக செயல்படக்கூடிய அமைச்சரவை உருவாக வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

லெபனான் நாட்டில் 1975 முதல் 1990 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது அந்நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்தது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான லெபனான் நாணய மதிப்பு குறைந்தது. மேலும் உலக அளவில் மிக அதிகமான கடன்களையும் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here