தனுஷ் நடிக்கும் மூன்றாவது இந்திப் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், ராஞ்சனா, சமிதாப் ஆகிய இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

3-வது இந்திப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். இவர் தனுஷின் முதல் இந்திப் படமான ராஞ்சனாவை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Atrangi Re’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் தனுஷ் உடன் நடிகர் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

மார்ச் 1-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here