நேபாளத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த உலகின் குள்ள மனிதர்

சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உலகிலேயே மிகக் குள்ளமான மனிதர் ககேந்திர தபா (27 வயது)

1992 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி பிறந்த இவரது உயரம் 67.08 சென்டி மீட்டர்.

இவரது மொத்த உடல் எடையே வெறும் 6 கிலோதான்.

கடந்த 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகிலேயே மிகக் குள்ளமான மனிதராக இவர் தெரிவு செய்யப்பட்டார்.

இதற்காக இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூன்ரே என்பவர் 59.93 சென்டிமீட்டர் உயரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால்,

நேபாளத்தின் ககேந்திர தபா தனது குள்ள மனிதர் பட்டத்தை இழந்தார்.

நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, ககேந்திர தபா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், (17) பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் நடைபெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here