கடந்த சில நாட்களில் ஏற்பட்ட வௌ்ள நிலைமையினால் இலட்சக்கணக்கான ஏக்கர் பயிர்நிலங்கள் சேதமாகியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நெல் வயல் நிலங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம், பொலன்னறுவை, வன்னி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்திலும் விவசாய நிலங்களுக்குள் வௌ்ளம் புகுந்தமையால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க துரித நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய நிலங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் மதிப்பீடு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்
விவசாய மற்றும் கமநல பாதுகாப்பு சபையினூடாக நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.