உக்கிரேனுக்கு ஆயுதம் வழங்குவோம் ஜோ பைடன் கூறியுள்ளார். 19 நாளாக உக்கிரேன் மீது ரஷ்யா ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றது
பதிலடியாக உக்கிரேன் இராணுவமும் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றது. இதுவரைக்கும் பல பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ தளபாடங்களை ரஷ்யா இழந்தும் 13 ஆயிரம் வீரர்களை இழந்து, கடுமையான குண்டுமழை பொழிகின்றது.
உக்கிரேன் நாட்டை பாதுகாக்க அமெரிக்க உக்கிரேனுக்கு ஆயுத உதவிகளை வழங்கும் என்றும் உக்கிரேன் மக்களுக்கு அமெரிக்காவில் குடியுரிமை வழங்கப்படும் அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.
இரண்டு நாடுகளும் அமைதியான முறையில் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று பல உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் ரஷ்யா அதிபருடன் போர்நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடடுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.