லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர்.
இந்தப் படத்தில் கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் நடிகர் சாந்தனு, ஆன்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் 3 போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்ட படக்குழு, கடந்த பிப்ரவரி 14-ம் தேதியன்று அனிருத் இசையில் விஜய் சொந்தக் குரலில் பாடிய குட்டி ஸ்டோரி பாடலை வெளியிட்டது.
இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் கலை இயக்குநர் சதீஷ் குமாரின் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு.
அப்போது நடிகர் விஜய் சேதுபதி கலை இயக்குநர் சதீஷ் குமாருக்கு வாழ்த்துச் சொல்லி கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த நடிகர் விஜய் தனக்கும் ஒரு முத்தம் வேண்டும் என்று
விஜய் சேதுபதியிடம் கேட்க, அவருக்கு அன்பு முத்தமிட்டார். இத்தகவல் தீயாகப் து
மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தார்.
இதனால் படம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்புகள் அதிகம்.