இலங்கையில் நான்கு தேரர்களை கைது செய்ய உத்தரவு

0
1307
மூதூரில் முன்னாள் போராளிகள் நால்வர் கைது!

அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்காக நான்கு தேரர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார்.கைது க்கான பட முடிவு

பெங்கமுவெ நாளக தேரர், மாகல்கந்தே சுதத்த தேரர், இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் மெடில்லே பன்யலோக தேரர் ஆகியோருக்கு எதிராகவே பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் போராட்டத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியது சம்பந்தமான வழக்கில் குறித்த தேரர்கள் சந்தேகநபர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர கடந்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றில் ஆஜராகாமையின் காரணமாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த அங்குலுகல்லே சிறி ஜினானந்த தேரர் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here