போதைத் தடுப்புப் பொலிஸார் இந்தக் கஞ்சா கடத்தலை முறியடித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கீரிமலையைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் விஸ்வமடுவைச் சேர்ந்த 19 வயதுடைய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரும் கீரிமலைப் பகுதியிலிருந்து சிறிய ரக லொறி ஒன்றில் சுமார் 120 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா பொதிகளை கடத்திச் சென்ற போது குறித்த இருவரும் சில்லாலையில் கைது செய்யப்பட்டனர்.

லொறி, கஞ்சா என்பவற்றுடன் சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்கதக்கது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here