கடந்த 50 ஆண்டுகளில் இல்லாதவகையில் இத்தாலியின் பாரம்பரிய நகரான வெனிசில் வரலாறு காணாத மழை மற்றும் அதை தொடர்ந்த வெள்ளத்தால் சுற்றுலா பயணிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்குரிய இடங்களில் முக்கிய இடமான வெனிஸ், அதன் பாரம்பரிய அழகிற்காக போற்றப்படுகிறது.
இந்நிலையில், அங்குள்ள கலைப்படைப்புகள் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்டவை இந்த மழைவெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்தாலியின் பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்துள்ளன. வரலாறு காணாத இந்த மழையால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.