ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது நவம்பர் 5 ஆம் திகதிக்கு பிறகு பொருளாதார தடை விதிக்கப்படும் என மிரட்டிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தற்போது பின்வாங்கியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, “ஈரானுடனான முந்தைய அரசு செய்துகொண்ட அணு சக்தி ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது. அந்த ஒப்பந்தத்தை முறிப்பேன்” என்று அறிவித்தார்.
அதே போல ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.