அருண் விஜய் மீது வனிதா ஆதங்கம்.

வனிதாவின் சகோதரி தனது குடும்பத்தினருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார்.

அதில் வனிதா மட்டும் இல்லை என்பதால் அவரது ரசிகர்கள் பலரும் வனிதா எங்கே என்று கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து குடும்ப உறவுகளைப் பிரிந்து வாழ்வது குறித்த தனது ஆதங்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வனிதா பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, “உண்மையான ஹீரோ அவரது சகோதரியை காயப்படுத்தவோ, ஏமாற்றவோ மாட்டார்.

நான் தொடர்ச்சியாக உன்னாலும், என்னுடைய சகோதரிகளாலும் அவமானப்படுத்தப்படுகிறேன்.

புறக்கணிக்கப்படுகிறேன். இதைத் தீர்த்து வைக்க உன்னால் முடியும். சமமாக நடத்தப்படுவதற்கு எனக்கு தகுதியிருக்கிறது.

என்னையும் எனது குழந்தைகளையும் காயப்படுத்த வேண்டாம்.

உனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடாதே. நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும். யாரும் இங்கே சரியானவர்கள் கிடையாது.

நாம் எல்லோரும் குழப்பியே இருக்கிறோம். நம்முடைய குழந்தைகள் மீது அன்பு செலுத்தும் சுதந்திரமுள்ள உறுதியானவர்கள் நாம்.

யோசித்துப் பார். உன்னுடைய குழந்தையையும், உன்னுடைய வீட்டையும் எடுத்துக்கொண்டு காவல்துறை மூலம் உனக்கு நெருக்கடி கொடுத்து,

உனக்கு சொந்தமானவற்றை எல்லாம் எடுத்துக்கொண்டு உன்னுடைய குடும்பம் உன்னை தெருவில் வீசி,

உனக்கு மன ரீதியாக நம்முடைய அப்பா தொந்தரவு கொடுத்தால் அது உன்னுடைய பிரச்னை இல்லை. நீங்கள் என்னை அப்படித்தான் வீசி எறிந்தீர்கள்.

நான் வெளியில் தள்ளப்பட்டேன. நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டேன். அழிக்கப்பட்டேன்.

ஆனால், எல்லா சூழ்நிலையிலும் நான் உயிர்பித்திருந்தேன். இதெல்லாம் என்னையும் என்னுடைய குழந்தையையும் கொல்வதற்கு பதிலாக

முன்பைவிட பலசாலியாக்கியது, வலிமையாக்கியது, வெற்றியாளராகச் செய்தது. மன்னித்துவிடுங்கள். நான் உங்கள் மீது அதிருப்தியில் உள்ளேன்.

வளருங்கள், பொறுப்புடன் இருங்கள். சரியானவற்றை செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

வனிதா விஜயகுமாரின் தொடர்ச்சியான பதிவுகளைப் பார்த்த அவரது ரசிகர்கள் கலங்க வேண்டாம் என்று ஆறுதல் வார்த்தை கூறிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here