விஷால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஏற்கனவே

வேட்புமனு தாக்கல் செய்து அது தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நல இயக்கத்தை துவங்கினார்.Related image

இந்நிலையில், நடிகர் விஷாலும் இயக்கத்தை துவங்கிவிட்ட நிலையில் ரஜினிகாந்த் எப்போது கட்சியை தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரஜினி அரசியலுக்குள் நுழைவதாக அறிவித்து இதோடு 8 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், அரசியல் கட்சி துவங்குவதற்கான எந்த அரிகுறியும் தெரியவில்லை. சமீபத்தில் ரஜினியின் அமைப்பில் சேர ஏகப்பட்ட ரூல்ஸ் போடப்பட்டு, அந்த அமைப்புக்காக வட்டம், மாவட்டம் என நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு விட்டனர்.

ரஜினி எப்போது கட்சி ஆரம்பிப்பார், எப்போது தீவிர அரசியல்வாதியாக மாறுவார், என்ன செய்யப் போகிறார், ஏது செய்ய போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லாம் தகர்ந்து, தற்போது வந்த விஷால் இயக்கத்தை ஆரம்பித்து விட்டார் நீங்கள் எப்போ கட்சி துவங்குறது என சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here