
கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை (24.03.2020) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு நண்பகல் 12 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.
ஏற்கனவே பிற்பகல் 2 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாளை 12 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27.03.2019) காலை 6 மணிவரை தொடர்ந்து நீடிக்கும்.