மட்டக்களப்பு காத்தான்குடி மற்றும் வாகரை பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 10 பேரை (24) கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலையங்களின் பொலிசார் தெரிவித்தனர்.

கொரோனா தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் பிறப்பிகப்பட்டு நேற்று திங்கட்கிழமை (23) திகதி காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டடு பின் தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை காலை 6 மணிவரை ஊரங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில்; நேற்று திங்கட்கிழமை பிறபகல் 2 மணி தொடக்கம் இன்று பகல் வரையும் ஊரடங்கு சட்டத்தை மீறி நடமாடிய காத்தான்குடியில் 8 பேரும் வாகரையில் 2 பேர் உட்பட 10 பேரை பொலிசார் கைது செய்தனர்

இதேவேளை கடந்த 20 ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரையிலான ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட தினங்களில் மட்டு மாவட்டத்தில் சட்டத்தை மீறி நடமாடிய 44 பேரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here