பிரச்னையால் தவிக்கும் விஜய் சேதுபதி.!

மண்டி விளம்பரம் பிரச்சனை இன்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் நிறுவனர் விக்கிரம ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில்,

“நடிகர்கள் நட்சத்திரமாக மின்னுவதற்கு வணிகர்களும் ஒரு காரணமாக உள்ளனர்.

மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் நடிப்பதற்கு தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

நடிகர்கள் பொருளின் தரம் பார்த்து நடிப்பதில்லை. பணம் பார்த்து தான் நடிக்கின்றனர்.

தான் நடிக்கும் விளம்பரம் அதனால் ஏற்படும் பாதிப்புகளை அவர்கள் உணர வேண்டும்.

இல்லையென்றால் அவர்கள் நடிக்கும் படங்கள் தோல்வியில் தான் முடியும்.

அதற்கு ‘சங்கத் தமிழன்’ படம் ஒரு உதாரணம். அதை நாங்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்.

நடிகர் விஜய் சேதுபதி ஆன்லைன் விளம்பர படத்தில் நடித்ததற்காக எங்களிடம் இதுவரையில் வருத்தம் தெரிவிக்கவில்லை.

எங்களை சந்தித்து பேசுவதாக கூறி உள்ளார். ஆனால் இதுவரை பேசவில்லை” என்று கூறியுள்ளார்.

தன்னை விடாது துரத்தும் இப்பிரச்னை குறித்து விஜய் சேதுபதி வாய் திறந்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here