தேமுதிக தலைவர் விஜயகாந்த மகன் விஜய பிரபாகரனுக்கும் கோவை விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையத்தில் சேர்ந்தவர் தொழிலதிபர் இளங்கோ. இவரது மகள் கீர்த்தனா.
இவருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து விமானம் மூலமாக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயபிரபாகரன் ஆகியோர் கோவை வந்தனர்.
பின் சிங்காநல்லூரில் உள்ள உறவினர் வீட்டில் பெண் பார்த்து பூ வைக்கும் நிகழ்வு நடைபெற்றது .
மிக எளிமையாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சுதீஷ் மட்டும் பங்கேற்ற நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.