பல வன்முறைகள் உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இலங்கையில் நாளுக்கு நாள் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
நேற்று றம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் இலங்கையில் பல பகுதிகளில் மக்கள் டயர்களை கொளுத்திய வீதிமறியலிலும் ஈடுபட்டனர்.
கொழும்புக்கு வருவதற்கும், கட்டுநாயக்க விமானநிலையம் செல்வோருக்கும் கடுமையான நெருக்கடிகள் நேற்று இரவு ஏற்ப்பட்டது.
தொடர்ந்தும் மக்கள் காலிமுகத்திடலில் தமது போராட்டங்களை செய்துவருகின்றனர்.
வருகின்ற நாட்களில் இன்னும் விளைவுகள் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.