இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பேசினார். ராஜீவ் காந்தியை நாங்கள் கொன்றது சரிதான் என, விடுதலைப் புலிகளை தொடர்புபடுத்தி சீமான் பேசினார்.
அவரது பேச்சு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை வெளியாகி உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் குருபரன் குருசாமி, லதன் சுந்தரலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராஜீவ் காந்தி கொலைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை. ராஜீவ் கொலையுடன் எங்களை தொடர்புபடுத்துவது ஈழ மக்களை அழிக்க செய்யும் சதித்திட்டமாக தோன்றுகிறது.
பலமுறை விளக்கம் அளித்தாலும், ராஜீவ் கொலைக்கு காரணம் புலிகள்தான் என்ற கருத்து திணிக்கப்படுகிறது.
விடுதலைப்புலிகளுடன் ராஜீவ் காந்தி ரகசிய உறவை பேணி வந்துள்ளார். எங்கள் மீது சுமத்தப்படும் அபாண்டமான கொலைப்பழி துடைத்து எறியப்படவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here