திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 50 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது. சுர்ஜித் மீண்டு வர வேண்டி, நாகை அக்கரைப்பேட்டை வலம்புரி விநாயகர் கோவிலில் பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
சுர்ஜித்திற்காக தமிழகம் முழுவதும் பலரும் பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.
தற்போது குழந்தையை மீட்பதற்கு அதிவேகமாக குழி தோண்டும் அதிநவீன இயந்திரம ராமநாதபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘இரண்டு வயது குழந்தை சுர்ஜித் நிச்சயமாக மீட்கப்படும் என காத்திருக்கிறேன். மிகவும் வேதனையான நிகழ்வு.
நிச்சயமாக அந்த குழந்தை மீட்கப்பட வேண்டும். அந்த நல்ல செய்திக்காக அனைவருடன் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன். நம்பிக்கையுடன் இருப்போம் என்று கூறியுள்ளார்.